/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விஷ மருந்து தெளித்து நெற்பயிர்கள் அழிப்பு தம்மனுார் விவசாயி போலீசில் புகார்
/
விஷ மருந்து தெளித்து நெற்பயிர்கள் அழிப்பு தம்மனுார் விவசாயி போலீசில் புகார்
விஷ மருந்து தெளித்து நெற்பயிர்கள் அழிப்பு தம்மனுார் விவசாயி போலீசில் புகார்
விஷ மருந்து தெளித்து நெற்பயிர்கள் அழிப்பு தம்மனுார் விவசாயி போலீசில் புகார்
ADDED : டிச 24, 2025 06:47 AM

வாலாஜாபாத்: தம்மனுாரில், சம்பா பட்டத்திற்கு சாகுபடி செய்திருந்த நெல் பயிர்களை முன் விரோதத்தால் விஷம் தெளித்து அழித்தது குறித்து விவசாயி போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்டது தம்மனுார் கிராமம். இக்கிராமத்தில், பாலகிருஷ்ணன் என்ற விவசாயி, சம்பா பருவத்திற்கு இரண்டரை ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வயலுக்கு சென்று பார்த்தபோது, ஒரு அடி உயரம் வரை வளர்ந்திருந்த அப்பயிர்களின் குறிப்பிட்ட ஒரு பகுதி திடீரென கருகி காய்ந்து போய் உள்ளதை பாலகிருஷ்ணன் கண்டார்.
பிறகு சக விவசாயிகளோடு சாகுபடி நிலத்தை பார்வையிட்டபோது, அதிக வீரியம் கொண்ட களைக்கொல்லி மருந்து தெளித்து நெல் பயிர்களை நாசம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, பாலகிருஷ்ணன், மாகரல் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
தம்மனுாரில் என் தாய்க்கு சொந்தமான சர்வே எண்; 297/2, 298/1ல் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. அந்நிலத்தில் தற்போது நான் நெல் பயிரிட்டுள்ளேன். அந்த பயிர்கள் ஒரு மாதம் வயதுடையதாக வளர்ந்து செழிமையாக இருந்தது.
இந்த பயிர்களை முன் விரோதம் காரணமாக வந்தவாசி தாலுகா, அரியங்குளம் கிராமத்தில் வசிக்கும் ராஜாராம் என்பவர், கடந்த 21ல், பயிர் கருகி போகக்கூடிய அதிக வீரியம் கொண்ட களைக்கொல்லி மருந்து கொண்டு விசை தெளிப்பான் இயந்திரம் வாயிலாக நெல் பயிரிட்டுள்ள நிலத்தில் தெளித்துள்ளார்.
தற்போது அப்பயிர்கள் முற்றிலும் கருகி விட்டது.
விஷ மருந்து அடித்து உணவு பயிரை நாசம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அப்பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

