/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் இ.பி.எஸ்., பிரசாரம் அ.தி.மு.க., சார்பில் உற்சாக வரவேற்பு
/
ஸ்ரீபெரும்புதுாரில் இ.பி.எஸ்., பிரசாரம் அ.தி.மு.க., சார்பில் உற்சாக வரவேற்பு
ஸ்ரீபெரும்புதுாரில் இ.பி.எஸ்., பிரசாரம் அ.தி.மு.க., சார்பில் உற்சாக வரவேற்பு
ஸ்ரீபெரும்புதுாரில் இ.பி.எஸ்., பிரசாரம் அ.தி.மு.க., சார்பில் உற்சாக வரவேற்பு
ADDED : ஆக 22, 2025 02:01 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று இரவு பிரசாரத்திற்கு வருகை வந்த பழனிசாமிக்கு அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.க.,பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிச்சாமி, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என சட்டசபை தொகுதி வாரியாக பிரசார பயணம் செய்து வருகிறார்.
ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில் ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பிரசாரம் செய்தார். ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், குன்றத்துார் ஒன்றிய செயலளருமான மதனந்தபுரம் கே.பழனி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலர் போந்துார் எஸ்.செந்தில்ராஜன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிள்ளைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி வெங்கடேசன் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலர் வெங்கடேசன் தலைமையில் பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் இருந்து 500 பேர் பங்கேற்றனர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் என்.டி.சுந்தர் மற்றும் மாவட்ட பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ் தலைமையில், ஒரத்துார் ஊராட்சியில் இருந்து 1,000 பேர் பங்கேற்றனர். மாவட்ட துணை செயலர் எஸ்.எம்.சுந்தர்ராஜன் மற்றும் நந்தம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எம்.முத்துராமன் தலைமையில் 2,000 பேர் பங்கேற்றனர்.
மாங்காடு நகர செயலர் பிரேம்சேகர் மற்றும் குன்றத்துார் மேற்கு ஒன்றிய பாசறை செயலர் எம்.ஆர்.பரத்ராஜ் தலைமையில் 1,000 பேர் பங்கேற்றனர்.
வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் 200 பேர் பங்கேற்றனர்.
முன்னதாக வாலாஜாபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், வாலாஜாபாத் ஒன்றிய செயலர் நாகராஜ், வாலாஜாபாத் பேரூராட்சி செயலர் அரிக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.