/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'சிசிடிவி' கேமரா சேதம் குற்றங்கள் கண்டறிவதில் சிக்கல்
/
'சிசிடிவி' கேமரா சேதம் குற்றங்கள் கண்டறிவதில் சிக்கல்
'சிசிடிவி' கேமரா சேதம் குற்றங்கள் கண்டறிவதில் சிக்கல்
'சிசிடிவி' கேமரா சேதம் குற்றங்கள் கண்டறிவதில் சிக்கல்
ADDED : ஜூலை 27, 2025 12:40 AM

வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் ஊராட்சி, நல்லுாரில், சேதமடைந்த 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் ஊராட்சி, நல்லுார் வீரஆஞ்சநேயர் கோவில் அருகில், ஊராட்சி நிர்வாகம் அமைத்த, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா சேதமடைந்து, உடைந்து தொங்கிய நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதனால், இப்பகுதியில், 'சிசிடிவி' கேமரா அமைத்ததன் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.
எனவே, நல்லுார், வீரஆஞ்சநேயர் கோவில் அருகில் சேதமடைந்துள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.