/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கார் கண்ணாடியை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளை முயற்சி
/
கார் கண்ணாடியை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளை முயற்சி
கார் கண்ணாடியை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளை முயற்சி
கார் கண்ணாடியை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளை முயற்சி
ADDED : ஆக 22, 2025 09:36 PM
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் சார்-- பதிவாளர் அலுவலகம் அருகே, கார் கண்ணாடியை உடைத்து 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து செல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, திருமங்கலத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் நேற்று காலை, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரம் சார்- - பதிவாளர் அலுவலகத்திற்கு, பத்திர பதிவிற்காக 'நிஷான் சன்னி' காரில் சென்றார்.
சார் - - பதிவாளர் அலுலகம் எதிரே காரை நிறுத்தி விட்டு, அலுவலகத்தின் உள்ளே சென்ற போது, பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் இருவர், காரின் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்து 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து அங்கிருந்து தப்ப முயன்றனர்.
இதை கண்ட, ராமகிருஷ்ணன் அவர்களை விரட்டி பிடித்க முயன்றார். இதனால், அச்சமடைந்த கொள்ளையர்கள் 20 லட்சம் ரூபாயை அங்கேயே போட்டு விட்டு தப்பினர்.
இது குறித்த தகவலின் படி, சுங்குவார்சத்திரம் போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் சார்-- பதிவாளர் அலுவலகத்திற்கு பணத்துடன் வரும் நபர்களை நோட்டமிட்டு, மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருவதால், அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.