/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முன்னாள் மாணவ - மாணவியர் சந்திப்பு
/
முன்னாள் மாணவ - மாணவியர் சந்திப்பு
ADDED : ஆக 24, 2025 01:40 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில், முன்னாள் மாணவ - மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
உத்திரமேரூரில், புக்கத்துறை சாலையில் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் 1997 -- 2000 கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவ -- மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, பட்டாங்குளம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
அதில், முன்னாள் மாணவ -- மாணவியர் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லுாரி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு திரையிட்டு காட்டப்பட்டது.
பின், கல்லுாரி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், 220 மாணவ -- மாணவியரும், 30 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.