/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளாண் கண்காட்சி விவசாயிகளுக்கு நிதியுதவி
/
வேளாண் கண்காட்சி விவசாயிகளுக்கு நிதியுதவி
ADDED : ஆக 24, 2025 01:42 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் வேளாண் துறை சார்பில், உயிர்ம வேளாண்மை தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, 10 விவசாயிகளுக்கு அமைச்சர் காந்தி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை சார்பில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உயிர்ம வேளாண்மை தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியை கைத்தறி துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
வேளாண்மைத் துறையுடன் இணைந்து, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்பு துறை, சர்க்கரை துறை, மீன்வளத் துறை, பட்டு வளர்ப்பு துறை உள்ளிட்ட ஒன்பது துறைகள்பங்கேற்றன.
விவசாயிகளுக்கு தேவையான விழிப்புணர்வு செய்ய, 18 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
வேளாண் துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உயிர்ம வேளாண்மையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.
அதை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 விவசாய பயனாளிகளுக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் இடுப்பொருள்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.