/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3 நெல் கொள்முதல் நிலையங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் திறப்பு
/
3 நெல் கொள்முதல் நிலையங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் திறப்பு
3 நெல் கொள்முதல் நிலையங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் திறப்பு
3 நெல் கொள்முதல் நிலையங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் திறப்பு
ADDED : ஆக 22, 2025 09:41 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள சாலவாக்கம், எம்.மாம்பாக்கம், மெய்யூர் ஓடை ஆகிய கிராமங்களில், நேற்று நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம், எம்.மாம்பாக்கம், மெய்யூர் ஓடை ஆகிய கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
தற்போது, இக்கிராமங்களில் சொர்ணவாரி பருவ நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, சாலவாக்கம், எம்.மாம்பாக்கம், மெய்யூர் ஓடை ஆகிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், சாலவாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி, ஊராட்சி தலைவர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., --- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
அதேபோல், எம்.மாம்பாக்கம், மெய்யூர் ஓடை ஆகிய கிராமங்களிலும், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.