/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹோட்டல் முன் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபருக்கு போலீஸ் வலை
/
ஹோட்டல் முன் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபருக்கு போலீஸ் வலை
ஹோட்டல் முன் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபருக்கு போலீஸ் வலை
ஹோட்டல் முன் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபருக்கு போலீஸ் வலை
ADDED : ஏப் 29, 2024 03:51 AM
கூடுவாஞ்சேரி, : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி, 12-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் முத்துப்பாண்டி, 62. அ.ம.மு.க., கட்சி பிரமுகர்.
இவர், பஜனை கோவில் தெரு, கொளப்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை 4:30 மணிக்கு முத்துப்பாண்டியும், அவரின் மனைவி மேரியும், ஹோட்டல் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஹோட்டல்முன் உள்ள இரும்பு கேட்டின் மீது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், ஒரு பொருளை வீசிச் சென்றனர்.
அது, திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதில் வந்த தீப்பொறியால், ஹோட்டல் விளம்பர பேனர் சேதமடைந்தது.
இதுகுறித்து, முத்துப்பாண்டி கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். கிளாம்பாக்கம் மற்றும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தி இருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு போன்ற மர்ம பொருளை வீசிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.