/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் பொருட்கள் ஒதுக்கீடு பணி தீவிரம்
/
தேர்தல் பொருட்கள் ஒதுக்கீடு பணி தீவிரம்
ADDED : ஏப் 16, 2024 06:50 AM

திருப்போரூர் : திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான தேர்தல் பொருட்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, திருப்போரூர் சட்டசபை தொகுதியில் 318 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இந்த ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும், 383 ஓட்டுப்பதிவு இயந்திரம், 383 கட்டுப்பாட்டு கருவி, 414 வி.வி.பேட் கருவிகளில் திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில், போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தில், கடந்த 10ம் தேதி வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களின் கட்சி மற்றும் சுயேச்சை சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
அதேபோல், ஓட்டுப்பதிவின் போது பேனா, பென்சில், நூல், வாக்காளர் விரலில் வைக்கப்படும் அழியாத மை பாட்டில் உட்பட, 105 வகை பொருட்கள் ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக, திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், 318 ஓட்டுச்சாவடிகளுக்கு, தேர்தல் பொருட்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

