sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 29ம் தேதி வாகனங்கள் ஏலம்

/

 29ம் தேதி வாகனங்கள் ஏலம்

 29ம் தேதி வாகனங்கள் ஏலம்

 29ம் தேதி வாகனங்கள் ஏலம்


ADDED : டிச 23, 2025 07:19 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 29ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் மதுவிலக்கு வழக்கு களில் பறிமுதல் செய்யப் பட்ட நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், 29 பைக்குகள் என மொத்தம் 33 வாகனங்கள் வரும் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு, மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோர் பைக்குகளுக்கு 1,000 ரூபாயும், நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும் முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். முன் வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக் கப்படுவர். மேலும், ஏல செல விற்காக ஒவ்வொருவரிடமும் ரூ.100 பெறப்படும்.

ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை வரும் 29ம் தேதி காலை 8:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுக்கும் வாகனத்திற்கான முழு தொகையுடன், கூடுதலாக 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி சேர்த்து அன்றைய தினத்திலேயே செலுத்த வேண்டும். ஏலத்தில் பங்கேற்கும் வாகன உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விபரங்களை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக எண் 90424 17209 மற்றும் 04151 220260 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்ட றியலாம்.






      Dinamalar
      Follow us