/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலைப்பணியாளர்கள் சங்க ஒப்பாரி முழக்க போராட்டம்
/
சாலைப்பணியாளர்கள் சங்க ஒப்பாரி முழக்க போராட்டம்
ADDED : டிச 23, 2025 07:19 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி முழக்க போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத் திற்கு மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விஸ்வநாதன், மாரிமுத்து, பெரியசாமி, செல்லதுரை, தண்டபாணி முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு காமராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், சாமிதுரை விளக்கவுரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பணியாளர்கள் சங்க மாநில துணை பொது செயலாளர் மகாலிங்கம், மாவட்ட தலைவர் ரவி, சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர் மகாதேவன், முன்னாள் மாவட்ட செயலாளர் உத்திரகுமார் சிறப்புரையாற்றினர்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கிய காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்துவிட்டு, நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே நடத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மாவட்ட நிர்வாகிகள் செந்தில்முருகன், வீரபுத்திரன், வேளாங்கண்ணி வள்ளி, பிரபாகரன், தனமணி, சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

