/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மருத்துவக் கல்லுாரி சான்றிதழ் பாட பிரிவு சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கல்
/
அரசு மருத்துவக் கல்லுாரி சான்றிதழ் பாட பிரிவு சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கல்
அரசு மருத்துவக் கல்லுாரி சான்றிதழ் பாட பிரிவு சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கல்
அரசு மருத்துவக் கல்லுாரி சான்றிதழ் பாட பிரிவு சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கல்
ADDED : செப் 07, 2025 05:36 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாட பிரிவில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படு கிறது.
இது குறித்த கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரியில் 2025 - 26ம் கல்வியாண்டிற்கான சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை மற்றும் நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
ஓராண்டு சான்றிதழ் பயிற்சிகள் வகுப்புகளான எமர்ஜென்சி டெக்னிசியன், டயாலிஸிஸ் டெக்னிசியன், அனஸ்தீஷியா டெக்னிசியன், தியேட்டர் டெக்னிசியன், ஆர்தோபெடிக் டெக்னிசியன், மல்டி பர்ப்பஸ் ஹாஸ்பிட்டல் ஒர்க்கர் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 32 இடங்கள் காலியாக உள்ளன.
இது தொடர்பான விவரங்கள் https://www.gmckallakurichi.ac.in/ என்ற இணையதளத்திலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி அறிவிப்புப் பலகையிலும் காணலாம்.
மேலும் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக உதவி மையம், மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர், துணை முதல்வர் அலுவலகத்திலும் விண்ணப்பம் படிவங்கள் கட்டணமின்றி பெறலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 12ம் தேதிக்குள், மருத்துவக்கல்லுாரி முதல்வர், துணை முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், விதிகளுக்குட்பட்டு, வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.