/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விருகாவூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
/
விருகாவூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : அக் 26, 2025 04:59 AM

தியாகதுருகம்: விருகாவூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
விருகாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா முன்னிலை வகித்தனர்.
முகாமை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பொது மக்களுக்கு உடல் நலம் சார்ந்த பல்வேறு சிகிச்சைகளை அந்தந்த துறை சார்ந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
விருகாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
ஊராட்சி தலைவர் சந்திரலேகா, ஒன்றிய கவுன்சிலர் அய்யாசாமி, மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள், தி.மு.க., நிர்வாகிகள் எத்திராஜ், சாமிதுரை, நெடுஞ்செழியன், கணேசன், பழனிசாமி, கலியன், இளங்கோவன், பாலு, சுகாதாரத்துறை ஊழியர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

