/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம்
/
சங்கராபுரத்தில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 26, 2025 04:59 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி சார்பில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உலக போலியோ தினத்தை முன்னிட்டு நடந்த ஊர்வலத்திற்கு, ரோட்டரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். துணை ஆளுநர் சுரேஷ், முன்னாள் துணை ஆளுநர் முத்துக்கருப்பன். முன்னாள் தலைவர் சுதாகரன், வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகருப்பன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார்.
சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய ஊர்வலத்தை தாசில்தார் வைரக்கண்ணன் துவக்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், இன்னீர்வில் கிளப் தலைவி இந்துமதி, பொருளாளர் கலைவாணி, காமதேனு சேகர் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பிரகாஷ் நன்றி கூறினார்.

