ADDED : நவ 07, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே உரக்கடையில் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 47; இவர் தேவபாண்டலத்தில் உரக்கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு 7:00 மணிக்கு உர மூட்டைகளை வண்டியில் ஏற்றும் வேலையில் இருந்தார்.
அப்போது, கடை அருகில் நின்றிருந்த மர்ம நபர் திடீரென கடை யில் நுழைந்து கல்லா பெட்டியில் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பினார்.
இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

