ADDED : மார் 11, 2024 02:08 AM
ஈரோடு:ஈரோடு,
பெரியசேமூர், ஈ.பி.பி.,நகர் முருகன் கோவில் வீதியை சேர்ந்த
எலக்ட்ரீசியன் சரவணன். இவரின் மகள் மோனிகா, 24; வீட்டில் வரன்
பார்த்து வந்த நிலையில், கடந்த, 8ம் தேதி காலை வீட்டில் இருந்த மோனிகா,
கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், அதன் பிறகு வீடு
திரும்பவில்லை. சரவணன் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
* அறச்சலுார், கஸ்துாரிபா கிராமம், தீரன்
குழந்தைசாமி நகரை சேர்ந்த சிவசண்முகம் மகள் தாரணி, 18; அரசு கலை
கல்லுாரி மாணவி. கடந்த, 8ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீடு
திரும்பவில்லை. அன்று மாலை சிவசண்முகத்தின் மொபைல் போனுக்கு ஒரு
அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், தாரணியுடன் திருமணம் நடந்து
விட்டதாக கூறியுள்ளார். சிவசண்முகம் புகாரின்படி அறச்சலுார்
போலீசார், தாரணியை தேடி வருகின்றனர்.
* ஈரோடு, சூரம்பட்டி, உழவன்
நகர், காமராஜர் வீதியை சேர்ந்த சக்திவேல் மகள் டயானா, 19; நர்சிங்
படிப்பு படித்து வந்தார். பிடிக்காததால் வேறு படிப்பில் சேர போவதாக
பெற்றோரிடம் கூறி வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவர், 8ம்
தேதி மதியம் முதல் காணவில்லை. சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

