ADDED : மே 02, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ரயிலில் இன்ஜின் டிரைவர் அறையை ஏ.சி. மயமாக்க வேண்டும். ரயில் இன்ஜின்களில் கழிவறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
டிரைவர்கள் உள்ள அறையில் ஏற்படும் சத்தத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் டி.ஆர்.இ.யு. (தஷின் ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. யூனியன் கிளை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஒரு பெண் ஊழியர் உள்ளிட்ட 31 பேர் பங்கேற்றனர்.

