ADDED : டிச 25, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 25-
மொடக்குறிச்சி அருகே எழுமாத்துார் பொன் விழா நகர்
பகுதியில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார், நேற்று அப்பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வந்த ஒரு ஆம்னி வேனில், 850 கிலோ ரேஷன் இருந்தது. வேனை ஓட்டி வந்த அவல்பூந்துறை, ராட்டை சுற்றிபாளையத்தை சேர்ந்த சேகர், 32, என்பவரை கைது செய்தனர். ரேஷன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்தனர்.

