/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் செயின் பறிப்பு
/
பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் செயின் பறிப்பு
ADDED : மார் 07, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் காங்கேயம் சக்தி நகரை சேர்ந்தவர் வனிதாமார்க்ரேட், 56. இவர் காங்கேயம் அருகே ராசாபாளையம் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை, 9:30 மணிக்கு பள்ளிக்கு அவரது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெருமாள்மலை அருகே சென்றபோது, பின்னால் பல்சரில் பைக்கில் வந்த கொள்ளையர்கள், வனிதா மார்க்ரேட் கழுத்தில் இருந்த, 2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.
காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

