/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காரில் வந்து ஆடு திருடிய ஆசாமி சிறையிலடைப்பு
/
காரில் வந்து ஆடு திருடிய ஆசாமி சிறையிலடைப்பு
ADDED : மே 19, 2024 02:48 AM
காங்கேயம்: காங்கேயம் அருகே காடையூர் பசுவமூப்பன்வலசு, பாறைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 39; தோட்டத்தில் மாடு, வெள்ளாடு வளர்த்து வருகிறார். கடந்த, 14ம் தேதி நள்ளிரவில் காரில் வந்த இருவர், இரு வெள்ளாடு, 2 குட்டிகளை திருடி சென்றனர். காடையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அப்பகுதியினர் சந்தேகமடைந்த காரை மடக்கி பிடித்து, ஆசாமியை பிடித்து காங்கேயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார், பாறைப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார், 29, என்பது தெரிந்தது. அவருடன் வந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமன், 35, வந்ததும், அவர் தப்பியதும் தெரிந்தது. ஆடுகளை மீட்டு லோகேஸ்வரனிடம் ஒப்படைத்த காங்கேயம் போலீசார், காரை பறிமுதல் செய்தனர். சதீஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முத்துராமனை தேடி வருகின்றனர்.

