/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் அறங்காவலர் குழுவில் உள்ளூரை சேர்ந்தவர்கள் இல்லை: பா.ஜ., போராட முடிவு

ADDED : ஜன 19, 2025 02:24 AM
திண்டுக்கல்,:பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழுவில் இடம்பெற உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கு கூட தகுதியில்லையா என கேள்வி எழுப்பி உள்ள பா.ஜ., போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு 5 பேர் கொண்ட அறங்காவலர்கள் குழு சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் கூட பழநியை சேர்ந்தவர் இல்லை.
இது குறித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கனகராஜ் கூறியதாவது: தொழிலதிபர்கள், பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள், மகளிர், தி.மு.க.,வினர் என பலர் பழநியில் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கும் அறங்காவலராக தகுதி இல்லையா என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆட்சியில்ஏற்கனவே மண்ணின் மைந்தர்கள், மண்டகபடிதாரர்கள், வர்த்தகர்கள் என அனைவரும் மரியாதையை, உரிமையை, உடமையை இழந்துநடுரோட்டில் நிற்கிறார்கள். எந்த அடிப்படையில் இந்த குழு நியமிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டனர். இதற்கு பதில் கேட்டும், பழநி வாழ் மக்களை தொடர்ந்து புறக்கணித்து வரும் தி.மு.க., அரசையும், அறநிலைய துறையும் வன்மையாக கண்டித்தும் பா.ஜ., மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.