/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மனுக்களுக்கு நடவடிக்கை இல்லை; விவசாயிகள் புகார்
/
மனுக்களுக்கு நடவடிக்கை இல்லை; விவசாயிகள் புகார்
ADDED : நவ 26, 2025 04:38 AM
பழநி: அதிகாரிகளிடம் அளிக்கப்படும் மனுக்களுக்கு எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என விவசாயிகள் புகார் கூறினர்.
பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
துணை தாசில்தார் ஜெகதீஷ் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் கவுசிகா தேவி, தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் விவாதம் மகுடீஸ்வரன் : விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. சில துறை அலுவலர்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வருவதில்லை.
துணை தாசில்தார்: அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தங்கராஜ் : நிலத்தின் பட்டாவில் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
துணை தாசில்தார்: தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கந்தசாமி : தொப்பம்பட்டி வட்டாரத்தில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பயிர் அடங்கல் பெற சிரமம் ஏற்படுகிறது.
துணை தாசில்தார்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காளிதாஸ் : நெய்க்காரப்பட்டியில் புறக்கடைகளில் யூரியா முறைப்படி வழங்கப்படுவதில்லை.
வேளாண் உதவி இயக்குனர்: உரங்கள் பற்றிய விவரங்களை தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

