ADDED : நவ 26, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வீரமணி, தலைமை ஆசிரியர் அருந்ததி முன்னிலை வகித்தனர்.1 முதல் 18 வயது 94 குழந்தைகள் பங்கேற்றனர். மாற்றுத்திறன் குழந்தை பயிற்றுநர்கள் அனிதா, கிறிஸ்துராஜ், ஸ்டெல்லா மேரி, இயன்முறை மருத்துவர் சியாம் சுந்தர் ஆலோசனை வழங்கினர்.
செம்பட்டி பசுமை குறள் தன்னார்வ அமைப்பின் சார்பில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ், திருக்குறள் புத்தகம், மரக்கன்று மஞ்சப்பை ,எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சிங்காரவேல், தன்னார்வலர் ராமு ஏற்பாடுகளை செய்தனர். பயிற்றுனர் வெள்ளிமலை நன்றி கூறினார்.

