ADDED : டிச 28, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : சிலுவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம்,சிலுவத்துார் ஊராட்சி தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆபிரகாம் ,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மேற்பார்வையாளர் ஜோதிபாசு,செவிலியர் பாண்டிமாதேவி,பாரதி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், பாண்டிமாதவன், முருகன், ராமச்சந்திரன்,ரியாஸ் செய்திருந்தனர்.

