/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர்கள், பாதசாரிகளை பாடாய்படுத்தும் குட்டம் ரோடு
/
டூவீலர்கள், பாதசாரிகளை பாடாய்படுத்தும் குட்டம் ரோடு
டூவீலர்கள், பாதசாரிகளை பாடாய்படுத்தும் குட்டம் ரோடு
டூவீலர்கள், பாதசாரிகளை பாடாய்படுத்தும் குட்டம் ரோடு
ADDED : அக் 04, 2025 04:02 AM

வேடசந்துார்: வி.புதுக்கோட்டை ஊராட்சி முதலியார்பட்டியில் இருந்து குட்டம் செல்லும் தார் ரோடு சேதமடைந்துள்ளதால், புதுப்பித்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேடசந்துார் ஒன்றியம் வி.புதுக்கோட்டை ஊராட்சி முதலியார்பட்டி வழியாக குட்டம் செல்லும் தார் ரோடு இப்பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த கிராம சாலையாகும்.
இந்த ரோட்டின் வழியாகத்தான் வெங்கட்ராமன் புதுார், முதலியார்பட்டி, வி.புதுக்கோட்டை, புதுக்கோட்டை காலனி, வெள்ளை ராவத்தனுார், கேத்தம்பட்டி உள்ளிட்ட சுற்று பகுதி மக்கள் சென்று வர வேண்டும்.
இந்த ரோடு அமைத்து ஆண்டுக்கணக்கில் ஆகி விட்டதால் தற்போது கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வருவதும், நுாற்பாலை வாகனங்கள் தினமும் வந்து செல்வதும் இந்த ரோட்டில்தான். பஸ் போக்குவரத்து எதுவும் இல்லாத நிலையில் இந்த ரோட்டில் டூவீலர்களில் சென்று வருவதே மிக சிரமமாக உள்ளது.
விவசாயிகள் தங்களது விளை பொருட்களை டூவீலரில் எடுத்து செல்வதும், ஞாயிறு வார சந்தைக்கு பெண்கள் நடந்து செல்வதும் இந்த ரோட்டில் தான் என்பதால் விரைந்து புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
புதுப்பிக்கலாமே பி.மகாமுனி, மீனவர் அணி தலைவர், அ.தி.மு.க., முதலியார்பட்டி : முதலியார்பட்டி முதல் குட்டம் வரை செல்லும் இந்த ரோடு கடந்த ஆட்சியில் போடப்பட்ட நிலையில் தற்போது மோசமாக சேதமடைந்துள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் மக்கள் டூவீலரில், நடந்தும் செல்கின்றனர்.
பள்ளி மாணவர்களும் நடந்தே செல்கின்றனர். 10க்கு மேற்பட்ட குக்கிராம மக்கள் இந்த ரோட்டைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி சேதமடைந்த தார் ரோட்டை மீண்டும் புதுப்பித்து தர வேண்டும் .
விரைந்து நடவடிக்கை எடுங்க எ.சந்திரசேகர், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர், அ.தி.மு.க., வேடசந்துார்: வி.புதுக்கோட்டை ஊராட்சியின் மிக முக்கியமான ரோடு இதுதான். இந்த ரோட்டின் வழியாகத்தான் புதுக்கோட்டை, புதுக்கோட்டை காலனி, கேத்தம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
தற்போது மிக மோசமாக சேதம் அடைந்துள்ளதால் மழைக்காலம் வருவதற்குள் விரைந்து புதுப்பிக்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

