/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அம்பிளிக்கை வாலிபர் கொலையில் 5 பேர் கைது
/
அம்பிளிக்கை வாலிபர் கொலையில் 5 பேர் கைது
ADDED : அக் 04, 2025 04:01 AM
அம்பிளிக்கை: அம்பிளிக்கை அருகே கொசவபட்டியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கொசவபட்டியை சேர்ந்த ஸ்டாலின் 23 , அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வன் மனைவி சவுமியா 21 ,க்கு வாட்ஸ்ஆப்பில் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பினார். இதைப் பார்த்த செந்தமிழ் செல்வன் மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஸ்டாலின் வீட்டில் இருந்தபோது செந்தமிழ் செல்வன் உட்பட ஐந்து பேர் ஸ்டாலினை ஆயுதங்களால் தாக்கியதில் பலியானார்.
இதனை தடுக்க வந்த ஸ்டாலின் தந்தை பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் செந்தமிழ் செல்வன் 25, கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த மதன்குமார் 19, பாலமுருகன் 23, பிரகாஷ் ராஜ் 21, கொசவபட்டியை சேர்ந்த காந்தி ஆகியோரை கைது செய்தனர்.

