sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆற்று நீரில் கலக்கும் ரோட்டோர குப்பையால் நோய் தொற்று

/

ஆற்று நீரில் கலக்கும் ரோட்டோர குப்பையால் நோய் தொற்று

ஆற்று நீரில் கலக்கும் ரோட்டோர குப்பையால் நோய் தொற்று

ஆற்று நீரில் கலக்கும் ரோட்டோர குப்பையால் நோய் தொற்று


ADDED : செப் 17, 2025 08:50 AM

Google News

ADDED : செப் 17, 2025 08:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கி கொள்ளும் கார்டு : மாரம்பாடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் போது அடிக்கடி ஏ.டி.எம்., கார்டு மாட்டிக்கொள்வதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதை சீராக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--அ.சந்திர சேகர் மாரம்பாடி.

----மின்கம்பத்தால் ஆபத்து : பழநி அருகே புது ஆயக்குடி பள்ளிவாசல் இறக்கத்தில் மளிகை கடை அருகில் மெயின் ரோட்டில் மின் கம்பம் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்ற வேண்டும.

-அ.முகமது ஜின்னா, மானுார்.

ரோட்டோரம் குவியும் குப்பை

ஒட்டன்சத்திரம் சாமியார் புத்துார் ஜீவா நகரில் குப்பையை ரோட்டோரம் கொட்டி அகற்றாமல் உள்ளதால் மழை காலங்களில் நீரில் குப்பை அடித்துக்கொண்டு ஆற்று நீரில் கலக்கின்றன . இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். கார்த்திக் -ராஜா, ஒட்டன்சத்திரம்.

பாதாள சாக்கடையால் சேதமான ரோடு : திண்டுக்கல் லட்சுமி சுந்தரம் காலனியில் மூன்று வாரங்களுக்கு முன் தான் புதிதாக தார் ரோடு போடப்பட்டது. பாதாள சாக்கடை மேன்ஹோல் பணியால் புதிய ரோடு சேதமாகி வீணாகிறது.இதை சீரமைக்க வேண்டும்.

-துரை கணேசன், திண்டுக்கல்.

ரோடு விளிம்பில் பள்ளம் : தென்னம்பட்டி பிலாத்து ரோட்டில் பூஞ்சோலை பகுதியில் ரோடு விளிம்பில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் டூவீலர்கள் விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதியில் மண் நிரவி சீரமைப்பு பணி செய்ய உள்ளாட்சி முன் வர வேண்டும். --

-கண்ணன், பிலாத்து.

சர்வீஸ் ரோட்டில் கழிவுகள் : ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் பைபாஸ் மேம்பாலத்தில் தெற்கு பகுதியில் செல்லும் சர்வீஸ் ரோட்டில் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -

-முருகன், ஒட்டன்சத்திரம்.

கழிவுநீரால் சுகாதாரக்கேடு : திண்டுக்கல் அருகே மாலப்பட்டி ரோட்டில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .தெற்று நேய் பரவும் அபாயம் உள்ளதால் இங்கு சாக்கடை கட்டித்தர உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அர்ஜூனன், மலைப்பட்டி.






      Dinamalar
      Follow us