/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்வர் ஸ்டாலின் ஜன.7ல் திண்டுக்கல் வருகை
/
முதல்வர் ஸ்டாலின் ஜன.7ல் திண்டுக்கல் வருகை
ADDED : டிச 20, 2025 06:06 AM
திண்டுக்கல்: 'ஜன., 7 ல் முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் வருவதாக '' அமைச்சர் பெரியசாமி கூறினார்.
திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டபின் அவர் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர்., வரைவு வாக்காளர் வெளியீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பார்.
திண்டுக்கல்லில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்ப்போம். விஜயின் த.வெ.க., அரசியல் கட்சியே கிடையாது. அவரைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
முதலில் தேர்தல் களத்திற்கு வரட்டும் பின் அவரைப்பற்றி பேசலாம். 75 ஆண்டு பழமையான கட்சி தி,மு,க., விஜய் இப்பொழுதுதான் அரசியலுக்கு வந்துள்ளார்.திண்டுக்கலிற்கு முதல்வர் ஸ்டாலின் ஜன., 7ம் தேதி வர உள்ளார். அது குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

