/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வழக்கு வாகனங்கள் ஏலம் ரூ.7.20 லட்சம் வருவாய்
/
வழக்கு வாகனங்கள் ஏலம் ரூ.7.20 லட்சம் வருவாய்
ADDED : டிச 24, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது.
மதுரை டி.ஐ.ஜி., அபிநவ்குமார், எஸ்.பி.பிரதீப் துவக்கி வைத்தனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 26 டூவீலர்கள், ஒரு ஆட்டோ, கார் என 28 வாகனங்கள் ரூ.6 லட்சத்து 33 ஆயிரத்திற்கு ஏலம்போனது.
இதேபோல், தேனி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 5 டூவீலர்கள் ரூ.87 ஆயிரத்திற்கு ஏலம் போனது. பொதுஏலத்தில் 33 வாகனங்கள் மூலமாக ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டது.

