/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாடுகள் வரத்து குறைவு; விற்பனையில் மந்தம்
/
மாடுகள் வரத்து குறைவு; விற்பனையில் மந்தம்
ADDED : ஏப் 16, 2024 06:50 AM

ஒட்டன்சத்திரம்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைவாக இருந்த நிலையில் விற்பனையிலும் மந்த நிலை ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி மாட்டுச்சந்தை வாரந்தோறும் ஞாயிறு மாலை நடைபெறும். உள்ளூர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கன்றுகள், காளைகள், கறவை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை விற்றும், வாங்கியும் செல்வர். தமிழ்ப்புத்தாண்டு அன்று விவசாயிகள் தங்கள் வளர்ப்பு கால்நடைகளை விற்பதற்கு கொண்டு வரவில்லை இதனால் மாட்டுச்சந்தையில் 60 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வந்திருந்த மாடுகளில் பல விற்பனையாகவில்லை.
வியாபாரி ஒருவர் கூறுகையில்,''வறட்சி காரணமாக விவசாயிகள் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டததால் விலை குறைந்துள்ளது'' என்றார்.

