கோடியக்கரையில் இடைவிடாமல் கொட்டியது மழை; அதிக மழை எங்கே?
கோடியக்கரையில் இடைவிடாமல் கொட்டியது மழை; அதிக மழை எங்கே?
UPDATED : நவ 30, 2025 02:30 PM
ADDED : நவ 30, 2025 08:03 AM

சென்னை: புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 172 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும், டிட்வா புயல், தற்போது சென்னைக்கு 220 கிலோ மீட்டரிலும், புதுச்சேரிக்கு 130 கிலோ மீட்டரிலும், வேதாரண்யத்திற்கு 120 கிலோ மீட்டர் தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இன்று (நவ.,30) மாலை வட தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் புயல் நிலவக்கூடும். டிட்வா புயல் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. கரையை கடக்க வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பல்வேறு பகுதிகளில்கடந்த 24 மணி நேரத்தில், இன்று (நவ.,30) காலை 8.30 மணி வரை பதிவான மழைப்பொழிவு மில்லி மீட்டரில்,
நாகப்பட்டினம் 154 திருப்பூண்டி 130 கோடியக்கரை 118 வேளாங்கண்ணி 117 வேதாரண்யம் 116 திருக்குவளை 113 தலைஞாயிறு 107
* திருவாரூர்- 137
* நன்னிலம்- 123
* திருத்துறைப்பூண்டி- 113
* நீடாமங்கலம்- 93
* வலங்கைமான்- 89
* குடவாசல்- 74
* முத்துப்பேட்டை- 70
* தங்கச்சிமடம்- 134
* தொண்டி- 127
* திருவாடானை- 104
* தீர்த்தாண்ட தானம்- 104
* பாம்பன்- 99
* ராமேஸ்வரம்- 91
* மண்டபம்- 83
* மயிலாடுதுறை- 143
* மணல்மேடு- 94
* சீர்காழி- 137
* கொள்ளிடம்- 93
* செம்பனார்கோவில்- 172
தடை
டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் மெரினா கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வாலிபர் பலி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் பிரதாப்,19. புயல் காரணமாக கொட்டி தீர்க்கும் கனமழையால், சேதம் அடைந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் பிரதாப் உயிரிழந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் சாலையில் பழமையான ஆலமரம் விழுந்தது. இதனால் இரவு முதல் தற்போது வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வீடு இடிந்து பெண் பலி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு சுவர் இடிந்து, அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டின் மீது விழுந்தது.
இதில், முத்துவேல் மகள் ரேணுகா, 20, இறந்தார். மேலும் முத்துவேல், அவரது மனைவி சீதா, மற்றொரு மகள் கனிமொழி மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

