நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பண்ருட்டி அடுத்த கானங்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் பிரவீன்குமார், 26.
இவர் கடந்த ஒரு மாதமாக சி.என்.பாளையம், காமாட்சியம்மன் கோவில் தெருவில் தனது அக்கா அபிநயா வீட்டில் தங்கி ஆசாரி வேலை செய்தார்.
உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக அபிநயா வேப்பூர் சென்றார். இவர், நேற்று மொபைல் போனில் தொடர்பு கொண் டும் பிரவீன்குமார் எடுக்கவில்லை.
சந்தேகமடைந்த உறவினர்கள், அபிநயா வீட்டிற்கு சென்று பார்த்த போது, பிரவீன்குமார் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.