
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா நடந்தது.
பண்ருட்டி மனவளக் கலைமன்ற அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் தம்பதி ஒற்றுமைக்காக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த விழாவிற்கு, மன்ற செயலாளர் ராஜாராமன் வரவேற்றார்.
லட்சுமி ரங்கா எண்டர்பிரைசஸ், உரிமையாளர் விஜயரங்கன், விழுப்புரம் மண்டல துணைத் தலைவர் ஏழுமலை புனிதா, ராணி ஜெயமேரி, பன்னீர், மணிமேகலை ஆகியோர் வாழ்த்தி பேசினர். பழனிவேல்- கிருஷ்ணவேணி தம்பதி, காந்த பரிமாற்ற தவத்தை நடத்தி வைத்தனர்.
விழுப்புரம் மண்டல முன்னாள் தலைவர் ராமமூர்த்தி - வாசுகி தம்பதியினர் உட்பட பலர் பங்கேற்றனர். மன்ற பொருளாளர் அபிராமி விஜயரங்கன் நன்றி கூறினார்.