/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் - கார் மோதிய விபத்தில் ஆற்றுக்குள் விழுந்தவர் மரணம்
/
பைக் - கார் மோதிய விபத்தில் ஆற்றுக்குள் விழுந்தவர் மரணம்
பைக் - கார் மோதிய விபத்தில் ஆற்றுக்குள் விழுந்தவர் மரணம்
பைக் - கார் மோதிய விபத்தில் ஆற்றுக்குள் விழுந்தவர் மரணம்
ADDED : ஆக 29, 2025 05:51 AM

அரியாங்குப்பம்: புதுச்சேரியில் ஆற்று பாலத்தில் சென்ற கார், பைக் மீது மோதிய விபத்தில், துாக்கி எறியப்பட்ட வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார்.
கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி டாடா இண்டிகா கார் நேற்று வந்து கொண்டிருந்தது. அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் சென்றபோது, எதிரில் வந்த பைக் மீது கார் மோதியது.
இதில், பைக்கை ஓட்டி வந்த சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரை சேர்ந்த சந்தோஷ்குமார், 31, துாக்கி எறிப்பட்டு, பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து மூழ்கினார்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து, படகு மூலம், தண்ணீரில் விழுந்தவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர தேடுதலுக்கு பின் சந்தோஷ்குமார் சடலத்தை மீட்டனர். அவரது ஒரு கால் முறிந்து தொங்கிய நிலையில் இருந்தது. சடலத்தை கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் கைப்பற்றினர்.
இந்த விபத்தில், கார் மோதியதில், அவ்வழியாக ஸ்கூட்டரில் சென்ற பூரணாங்குப்பத்தை சேர்ந்த லோகநாதன் மனைவி மஞ்சு, 65, என்பவரும் காயமடைந்தார். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், கார் ஓட்டிவந்த பிரகாஷ், 35, என்பவரை கைது செய்தனர்.
இந்த விபத்தால், பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்தன. இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில், 2 மணி நேரத்திற்கு மேல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.