/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுாற்றாண்டை கடந்து சாதிக்கும் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
/
நுாற்றாண்டை கடந்து சாதிக்கும் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
நுாற்றாண்டை கடந்து சாதிக்கும் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
நுாற்றாண்டை கடந்து சாதிக்கும் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
ADDED : செப் 07, 2025 03:48 AM

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியானது, கடந்த 1879ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவக்கப்பள்ளியாகதுவங்கப்பட்டது. 1920ல் நடுநிலைப்பள்ளியாகவும், 1922ல் உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்ந்தது.
1927ம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி பள்ளியாகவும்செயல்பட்டது. 1978ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை தரம்உயர்த்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்ட போது, கடலுார் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர் அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி அதில் தேர்வு பெற்றது.
2022ம் ஆண்டு முதல் தகைசால் பள்ளியாக தரம் உயர்ந்து, தமிழகத்தில் சிறந்த பள்ளியாகதிகழ்கிறது. பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 950 பேர், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 680 பேர் என மொத்தம் 1,630மாணவிகள் படிக்கின்றனர்.
பள்ளியில் நிரந்தர பணியிடத்தில் 59 ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக மூன்று ஆசிரியர்களும்,கல்வி மேலாண்மை தகவல் மைய பணிக்காக ஒருவரும், அலுவலக பணிக்காக 8 பேரும், பாட்டு, நடனம், விளையாட்டு பயிற்சியாளர்கள் ஆறுபேரும், நுாலகர் ஒருவரும் பணி புரிகின்றனர்.
பள்ளியில் 50 வகுப்பறைகள், கணினி ஆய்வகம், 10 உயர்தொழில்நுட்ப ஆய்வகம், கற்ற தொழில்நுட்ப அறிவை சோதித்து பார்க்கும்ஏ.டி.ஏ.எல்.,ஆய்வகம், சமுதாய புரிதல் மற்றும் கலை சார்ந்த அறிவு பெற ஒளி மற்றும் ஒலி அறை, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்ஆய்வகங்கள், பொது அறிவு பெற நுாலகம் விளையாட்டு மைதானம், முதலுதவிப்பெட்டி உட்பட அனைத்து வசதிகளும் இப்பள்ளியில் உள்ளன.
மேலும் தகைசால் பள்ளியாக மேம்படுத்தப்பட்டதால், மேல்நிலை நீர்தேக்க தொட்டி,18 வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாகவும்மாற்றப்பட்டன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, போதிய அளவிலான கழிவறை வசதிஉள்ளது.
பாடம் சாரா செயல்பாடுகள்
ஏட்டுக்கல்வி மட்டுமல்லாது, பாடம் சாரா செயல்பாடுகளும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. சாரண, சாரணிய படை, இளையோர் செஞ்சிலுவைசங்கம், நாட்டு நலப்பணித்திட்டம், சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமைப்படை, நுகர்வோர் பாதுகாப்பு மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம், சட்டபாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம், மகிழ்முற்றம், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம், தமிழ்மன்றம், ஆங்கிலமன்றம், கணிதமன்றம், அறிவியல்மன்றம், வானவில் மன்றம், சமூக அறிவியல் மன்றம், ஆற்றல் மன்றம், வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், மாணவர் காவல்படை, உயர்கல்விவழிகாட்டு மன்றம் ஆகியவை மாணவிகளின் திறன்களை மேம்படுத்த செயல்பட்டு வருகிறது.
மாணவிகளின் எதிர்கால கனவுகளை நனவாக்கும்வகையில், ஜே.இ.இ., நீட், க்யூட், கிளாட் தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சிறப்புபயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவியரின் சாதனைகள் மாணவி மோனிஷா விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார். மாநில அளவிலானகலைத்திருவிழா போட்டியில், ஆங்கிலம் ஒப்புவித்தல் போட்டியிலும் முதலிடம் பிடித்தார்.
2024--25ம் ஆண்டு நடந்த கலைத்திருவிழா போட்டியில்பரதநாட்டியம் பிரிவில் எட்டு பேர் கொண்ட குழு, மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தது. மாணவி காவ்யா, 2023--24ம் ஆண்டில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றார்.
2024--25ல் திறனாய்வுதேர்வில் மாணவிகள் மோனிஷா, மகேஸ்வரி தேர்ச்சி பெற்றனர். ஆசிரியை ராஜீவியின் பயிற்சியால், தேசிய திறனாய்வு தேர்வில் 2018ம் ஆண்டு ஒருமாணவியும், 2019ம் ஆண்டில் 2 மாணவிகளும், 2020ம் ஆண்டில் 4 மாணவிகளும், 2022ம் ஆண்டில் 3 மாணவிகளும், 2023ம் ஆண்டில் 2 மாணவிகளும், 2024ம் ஆண்டில் 3 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
'நீட்' தேர்வில் பல மாணவிகள் தேர்ச்சி பெற்று, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில்முதன்மைக் கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கின்றனர். தமிழக அரசின் கனவு ஆசிரியர் போட்டியில் இப்பள்ளி ஆசிரியை பரமேஸ்வரி, 2023-24ம் ஆண்டுக்கான கனவு ஆசிரியர் பட்டம் வென்றார்.
2024---25ல் திருச்சியில் நடந்த முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டியில் 6 மாணவிகளும், கூடைப்பந்து போட்டியில் 2 மாணவிகளும், தடகளத்தில்3 மாணவிகளும் பங்கேற்றனர். மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் பிளஸ் 2 மாணவி கமலி, இரண்டாமிடம் பெற்றார்.
மாவட்ட அளவிலான கூடைப்பந்து, மேசைப்பந்து, வளைப்பந்து ஆகியவற்றில் இப்பள்ளி மாணவிகள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும் தடகளம், குண்டு எறிதல், கைப்பந்து போட்டிகளிலும் மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனர்.
தனிப்பட்ட முயற்சியில்மாணவிகள் சிலம்பம், கராத்தே போன்ற போட்டிகளிலும் மாநில அளவில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றுள்ளனர். தேசிய அளவிலான போட்டியில் பிளஸ் 1 மாணவி சிவான்யா, மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தார்.
தலைமை ஆசிரியர் பெற்ற விருதுகள் தலைமை ஆசிரியர் இந்திரா 2023-24ம் ஆண்டிற்கான மாநில அளவிலான அண்ணா தலைமைத்துவ விருது, மாவட்ட நிர்வாகம் மூலம் பெண் கல்வியில் முன்னேற்றத்திற்கானசாதனை விருது, கடலுார் ரோட்டரி கிளப் சார்பில் நேஷனல் பில்டர்ஸ் விருது, கடலுார் மிட் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் சிறந்த தலைமைத்துவவிருது, கூத்தப்பாக்கம் ரோட்டரி கிளப் சார்பில் சிறந்த ஆசிரியை விருது, பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2020- -21ம் ஆண்டில் சிறந்த பள்ளிக்கான விருது, 2019--20ம் ஆண்டில் சமூக நலத்துறை மாணவர்சேர்க்கை விருது, பெண்கல்வி மேம்பாட்டிற்கான மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது பெற்றுள்ளார்.
கீதா, முதுகலை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் : இவர் 2012 முதல் இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். மாணவர்கள் நன்கு ஆங்கிலத்தில் புலமை பெறவும், பேசவும் சிறப்பாக பயிற்சி அளிக்கிறார்.மேலும் மாணவிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் ஆலோசகராகவும் திகழ்கிறார்.
புனிதா,முதுகலை இயற்பியல் ஆசிரியர்: இவர் 2012 முதல் இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இயற்பியல் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி அளித்து வருகிறார். மாணவிகள் தமிழ்நாட்டின்முன்னணி கல்லூரிகளில் உயர் கல்வி படிக்க ஆலோசனை வழங்கி வருகிறார்.
பரமேஸ்வரி,சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்: சமூக அறிவியல் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி அளித்து வருகிறார். தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்றவர்.
இந்துமதி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் :ஆங்கில பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி வழங்கி வருகிறார். மேலும் பள்ளியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாசிரியர். மாணவர்கள்இணையவழி தேர்வுகள் எழுத வழிகாட்டி ஆசிரியராக திகழ்கிறார்.
அமுதா,முதுகலை பொருளியல் ஆசிரியர்: இவர் இப்பள்ளியில் 2012ம் ஆண்டு முதல் முதுகலை பொருளியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ளமாணவிகளின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறுபாடங்களை கற்பிப்பதில் திறமையானவர்.