/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் 'தினமலர்' நாளிதழ் முன்னோடி
/
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் 'தினமலர்' நாளிதழ் முன்னோடி
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் 'தினமலர்' நாளிதழ் முன்னோடி
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் 'தினமலர்' நாளிதழ் முன்னோடி
ADDED : செப் 07, 2025 03:10 AM

நெல்லிக்குப்பம்,: மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் 'தினமலர்' நாளிதழ் முன்னோடியாக திகழ்வதாக நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறினர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
'தினமலர்' நாளிதழ் பவள விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தினமலரின் பங்கு அதிகமாகும். தொடர்ந்து மக்கள் பிரச்னைகளை பாரபட்சமின்றி வெளியிடுவது சிறப்பாகும்.
இதன் மூலம் பல பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
மாணவர்கள் நலன் கருதி பட்டம் இதழ் வெளியிடுவது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் விரும்பி படிக்கும் வகையில் செய்திகள் வெளியாகின்றன. அரசு பள்ளிகளை கவுரவிக்கும் வகையில் நம்ம பள்ளி, நம்ம வாத்தியார் செய்தி வெளியிட்டு சம்பந்தப்பட்ட சாதனைகளை வெளிக் கொண்டு வருகிறது. 'தினமலர்' நாளிதழின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.