/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி திறப்பு விழா
/
ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி திறப்பு விழா
ADDED : ஆக 31, 2025 07:58 AM

கடலுார் : கடலுார் லாரன்ஸ் ரோட்டில் ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரி நகைக்கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
கடலுார் லாரன்ஸ் ரோட்டில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் விற்பனையில் 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த, கை ராசி நிறுவனமான ஸ்ரீ லட்சுமிஜூவல்லரி, விரிவு படுத்தப்பட்டு புத்தம் புதுப்பொலிவுடன் 'ஏசி' உள்ளிட்ட வசதிகளுடன் திறப்பு விழா நடந்தது.
விழாவில், உரிமையாளர்கள் செந்தில்குமார், விஸ்வநாதன் வரவேற்றனர். மீனாட்சி மணி கடையை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முதல் விற்பனையை பாடலி மணி துவக்கி வைத்தார்.
விழாவில் ஸ்ரீபாலு புரவிஷன்ஸ் ரவி, பாலமுருகன், பாடலி அண்ட் கோ ஜூவல்லரிஅனந்தகிருஷ்ணன், சிவக்குமார், தினேஷ், மூத்த வழக்கறிஞர் சிவமணி, பண்ருட்டி ஸ்ரீவள்ளி ஜூவல்லரி நகை அடகு கடை ஆறுமுகம்,பால பாஸ்கரன் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.
திறப்பு விழாவையொட்டி,புத்தம் புது டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, வைர நகைகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
உரிமையாளர்கள் கூறுகையில், 'எங்கள் கடையில் 916 ஹெச்.யூ.ஐ.டி.,முத்திரை பதித்த தரமான தங்க நகைகள் மற்றும் டி.ஆர்.,ரெஜிஸ்டர்டு, 92.5 சில்வர்நகைகள் கிடைக்கும்' என்றனர்.