/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பஸ்சை மீண்டும் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை
/
அரசு பஸ்சை மீண்டும் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை
அரசு பஸ்சை மீண்டும் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை
அரசு பஸ்சை மீண்டும் இயக்க செம்பேரி மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 31, 2025 06:57 AM
பெண்ணாடம் : திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியா க செம்பேரி வரை அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி பணிமனையில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை தடம் எண்.7 டவுன் பஸ் இயக்கப்பட்டது.
இந்த பஸ் மூலம் பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், புதுப்பாளையம், தெத்தேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர் சென்று வந்தனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், இந்த டவுன் பஸ் எவ்வித அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டதால் இப்பகுதி மக்கள் பைக், சைக்கிள் மூலம் 5 கிலோ மீட்டர் துாரமுள்ள பெண்ணாடம் வந்து, அங்கிருந்து திட்டக்குடி, விருத்தாசலம் உட்பட பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், இரு மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.
எனவே, நிறுத்தப்பட்ட செம்பேரி அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.