ADDED : செப் 07, 2025 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : கல்லுாரி பயிலும் மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலுார், கொட்டக்குடியை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். இவரது, மகன் அமர்நாத், 23; இவர், பரங்கிப்பேட்டை ஆற்றங்கரை தெருவில் வாடகை வீட்டில் தங்கி, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்ற அமர்நாத் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தாய் அழகுசுந்தரி அளித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அமர்நாத்தை தேடி வருகின்றனர்.