/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா கல்வி குழுமம் தினமலருக்கு வாழ்த்து
/
ஜெயப்பிரியா கல்வி குழுமம் தினமலருக்கு வாழ்த்து
ADDED : செப் 07, 2025 07:41 AM

மந்தாரக்குப்பம் : மாணவர்களின் ஒளிவிளக்காக 'தினமலர்' நாளிதழ் திகழ்கிறது என, ஜெயப்பிரியா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
உண்மை, நடு நிலை ஆகியவை தினமலரின் அடையாளங்கள். தினமலர் நாளிதழ் வெளியிடும் ஒவ்வொரு செய்தியும் வாசகர்களை ஈர்த்திடும் வகையில் தனித்துவமான தலைப்புகளில் பிரசுரிக்கப்படுகின்றன. வாசகர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் செய்தி வெளியிடுவது தினமலரின் தனி சிறப்பாகும்.
ஆண்டு தோறும் ஏராளமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், பட்டம் வினாடி வினா போட்டிகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றி வருகிறது.
ஆன்மிக மலர், சிறுவர் மலர், வாரமலர், பட்டம் பயனுள்ள இணைப்புகளாக வாசகர்களின் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது.
அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பவள விழா காணும் தினமலருக்கு வாழ்த்துக்கள்.