/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் கண்காட்சி
/
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் கண்காட்சி
ADDED : நவ 05, 2025 07:54 AM

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கான கண்காட்சி நடந்தது.
பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினராக பல்லவா சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் ஸ்ரீதேவி பங்கேற்றார்.
இந்த கல்வியாண்டில் கடந்த 6 மாதங்களில், மழலையர்கள் பயின்றதை கண்காட்சியில் காட்சிக்காக வைத்திருந்தனர்.
விமான நிலையம், மருத்துவமனை, உணவகம், தீயணைப்பு நிலையங்கள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

