/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : நவ 08, 2025 01:54 AM

பண்ருட்டி: தினமலர் பட்டம் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பண்ருட்டி, திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தாளாளர் சேரன் சார்பில் தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் வழங்கப்பட்டது.
பள்ளியில் வாசிப்பு திறன் அதிகரிக்கவும், பொது அறிவை வளர்க்கும் வகையிலும் ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ், ஆச்சாரியா கல்விக்குழுமம் இணைந்து பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 'பதில் சொல், பரிசுவெல்' வினாடி-வினா போட்டி நடத்தியது.
பள்ளி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார்.
இந்த போட்டியில் தேர்வான 16 மாணவ, மாணவிகள் மொத்தம், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, தகுதிச்சுற்று நடந்தது.
போட்டியின் இறுதியில் பிளஸ் 1 மாணவர்கள் ராம்சந்தர், மதன்குமார் முதலிடமும், பிளஸ் 1 மாணவிகள் அஸ்ரா, ஜெயஸ்ரீ இரண்டாமிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் கலைவாணி, தலைமையாசிரியர் தேவி, ஆசிரியர் ரம்ஜானி ஆகியோர் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர்.
இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளியளவில் வெற்றிபெற்ற இரு அணிகளும் மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகியது.

