/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : பிப் 19, 2024 06:03 AM

வடலுார்: குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், குள்ளஞ்சாவடியில் நடந்தது.
கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்துலிங்கம், தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் உமாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாஷியம் வரவேற்றார்.
நெய்வேலியில் முன்னாள் முதல்வர் ஜெ., சிலை திறப்பு விழாவிற்கு 22ம் தேதி வருகை தரும் கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது. விழாவில், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றியம் சார்பில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வடலுார் நகர செயலாளர் பாபு, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், தகவல் தொழில்நுட்ப அணி திருமலைவாசன், ஒன்றிய பொருளாளர் சந்திரன், ஒன்றிய தலைவர் வைத்தி, துணை தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், தேவேந்திரன் ,செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

