/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகளுக்காக சிவகொழுந்து குரல் கொடுப்பார் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேச்சு
/
விவசாயிகளுக்காக சிவகொழுந்து குரல் கொடுப்பார் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேச்சு
விவசாயிகளுக்காக சிவகொழுந்து குரல் கொடுப்பார் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேச்சு
விவசாயிகளுக்காக சிவகொழுந்து குரல் கொடுப்பார் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : ஏப் 16, 2024 10:57 PM

பெண்ணாடம், - தே.மு.தி.க., சிவக்கொழுந்து தொகுதி மக்களின் பிரச்னைகள், விவசாயிகளின் குறைகளுக்காக லோக்சபாவில் குரல் கொடுப்பார்' என, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசினார்.
கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பெண்ணாம் பகுதிக்குட்பட்ட துறையூர், முருகன்குடி, பெலாந்துறை, கணபதிகுறிச்சி, பாசிக்குளம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, கொசப்பள்ளம், மாளிகைக்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசுகையில், 'மக்களை வஞ்சிக்கும் பா.ஜ., வையும், தி.மு.க.,வுக்கும் பாடம் புகட்ட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இருந்த எம்.பி., க்கு இங்கு எந்த ஒரு வளர்ச்சி பணிக்கான அடையாளமும் இல்லை. இதேபோன்று ஆரணி தொகுதியில இருந்த காங்., வேட்பாளரும் தொகுதி பக்கம் போகல. இதனால் அவரும் அங்க போட்டியிட முடியாததால் தொகுதி மாறி இங்க வந்து போட்டியிடுகிறார்.
இங்கு அவர்கள் வெற்றி பெற்றால் தொகுதி பக்கம் வரமாட்டார்கள். அதனால் நம் வேட்பாளர் சிவக்கொழுந்துவை வெற்றி பெற செய்யுங்கள். அவர், மக்களின் பிரச்னைகள், விவசாயிகள் குறைகளுக்காக லோக்சபாவில் குரல் கொடுப்பார்' என பேசினார்.
அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் சுப்ரமணியன், துறையூர் ஊராட்சி தலைவர் அமுதா ராஜதுரை, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராஜேந்திரன், அ.தி.மு.க., நிர்வாகிகள் அருளழகன், சந்திரகுமார், அரியராவி அர்ச்சுணன், மாளிகைக்கோட்டம் சுந்தரம், குணாளன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமலிங்கம், மணிகண்ணன், தே.மு.தி.க., தெற்கு மாவட்ட செயலர் உமாநாத், ஒன்றிய செயலர் அசோக்ராஜன், ஒன்றிய அவைத் தலைவர் செங்கமுத்து, பெண்ணாடம் நகர செயலர் இளம்பருதி, துணை செயலர் இளையராஜா, ஒன்றிய துணை செயலர் செந்தமிழன், கேப்டன் மன்ற செயலர் ஜோதிவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

