/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு; அஞ்சலி செலுத்த பா.ம.க., எதிர்ப்பு மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு; அஞ்சலி செலுத்த பா.ம.க., எதிர்ப்பு மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு; அஞ்சலி செலுத்த பா.ம.க., எதிர்ப்பு மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு; அஞ்சலி செலுத்த பா.ம.க., எதிர்ப்பு மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 29, 2024 05:50 AM

கடலுார் : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, கடலுார் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடலுார் மாநகராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்த கவுன்சிலர்கள் எழுந்து நின்றனர்.
அப்போது பா.ம.க., கவுன்சிலர் சரவணன் மட்டும், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஏன் அஞ்சலி செலுத்த வேண்டும். நான் அஞ்சலி செலுத்த மாட்டேன் என அவரது இருக்கையில் உட்கார்ந்தபடியே இருந்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க.,வினர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி குறித்து பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சட்டசபையில் பேச அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறினர்.
சில மாதங்களுக்கு பின் தற்போதுதான் மாநாகராட்சிக் கூட்டம் நடக்கிறது. மேலும் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நீங்கள் வெளிநடப்பு செய்வது சரியில்லை என்றார்.
இதற்கிடையே பா.ம.க., கவுன்சிலர் தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம் அதிகளவில் விற்பனையாகிறது என பேசியதும், அக்கட்சியின் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் பரணிமுருகன் பா.ம.க., கவுன்சிலர் பேசிக்கொண்டிருந்த மைக்கை பிடுங்கினார். அதனைத் தொடர்ந்து தி.முக.., அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறே அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சங்கீதா வசந்தராஜ், பரணி முருகன், தஷ்ணா, வினோத்குமார், அலமேலு, சுரேஷ்பாபு ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்களின் கேள்விக்கு, அதிகாரிகள் சரிவர பதிலளிக்க முடியாமல் திணறினர். பல மாதங்களாக நடக்காமல் இருந்த கூட்டம் தற்போதுதான் நடக்கிறது.
இந்த கூட்டத்திற்கு கமிஷனர் வராதது குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய மேயர், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்திற்கு கமிஷனர் சென்றுள்ளார். என கூறிவிட்டு மொபைல் போனில் பேசினார். கமினர் விரைவில் வருவதாக கூறியதையடுத்து கூட்டம் 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து மதியம் 12:45 மணிக்கு கமிஷனர் வருகை தந்து, பேசுகையில், 'எனக்கு பல அலுவல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறிவிட்டுச் செல்ல முடியாது.
கவுன்சிலர்கள், மேயர் இவர்களைக்கொண்டு கூட்டம் நடத்த வேண்டியதுதான். ஏதாவது கோரிக்கை என்றால் அது குறித்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

