/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரட்டை கொலை வழக்கு மீண்டும் சாட்சி விசாரணை
/
இரட்டை கொலை வழக்கு மீண்டும் சாட்சி விசாரணை
ADDED : செப் 17, 2025 11:45 PM
கோவை; கோவையில் நடந்த இரட்டை கொலை வழக்கில், மீண்டும் சாட்சி விசாரணை நடத்தப்படுகிறது.
கோவை, மரக்கடை, திருமால் வீதியில் வசித்து வந்தவர் மொய்தீன் பாஷா,34; இறைச்சி வியாபாரி. அதே பகுதியில், மொய்தீன் பாஷாவின் உறவினர் சாதிக் அலியும் இறைச்சி கடை வைத்துள்ளார். மொய்தீன் பாஷாவின் கடையில் இருந்து, அவருக்கு தெரியாமல் நான்கு கிலோ இறைச்சியை சாதிக்அலி எடுத்துச் சென்றுள்ளார். அவர்களுக்கு இடையே, 2015, நவம்பரில் தகராறு ஏற்பட்டது. மொய்தீன் பாஷாவுக்கு ஆதரவாக, அவரது நண்பர் ஹபீப் முகமது பேசியிருக்கிறார்.
அப்போது மொய்தீன் பாஷா, ஹபீப்முகமது ஆகியோரை, சாதிக் அலி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இதுதொடர்பாக சாதிக் அலி உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
அரசு தரப்பு சாட்சிகளிடம், மீண்டும் விசாரணை நடத்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில், விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.