/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் உரிமைத்தொகை கொடுக்கலாமா; வீடு வீடாகச் சென்று வி.ஏ.ஓ.கள் ஆய்வு
/
மகளிர் உரிமைத்தொகை கொடுக்கலாமா; வீடு வீடாகச் சென்று வி.ஏ.ஓ.கள் ஆய்வு
மகளிர் உரிமைத்தொகை கொடுக்கலாமா; வீடு வீடாகச் சென்று வி.ஏ.ஓ.கள் ஆய்வு
மகளிர் உரிமைத்தொகை கொடுக்கலாமா; வீடு வீடாகச் சென்று வி.ஏ.ஓ.கள் ஆய்வு
ADDED : செப் 17, 2025 11:46 PM

கோவை; உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கிய, மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் மீதான கள ஆய்வு துரித கதியில் நடந்து வருகிறது. அதில், சொந்த வீடா, வாடகை வீடா, எத்தனை சதுரடியில் வீடு அமைந்திருக்கிறது. கார் வைத்திருக்கிறார்களா என்பதை, ஆய்வு செய்கின்றனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம், கோவை மாவட்டத்தில் ஆக., 15 முதல் நடந்து வருகிறது. மகளிர் உரிமை தொகை கேட்டு, 1,22,239 மனுக்கள், இதர சேவை கேட்டு, 1,23,534 மனுக்கள் என, 2,45,773 மனுக்கள் பெறப்பட்டன.
மருத்துவ காப்பீடு திட்டம், ஆதார் அட்டை திருத்தம், பிறப்பு சான்று, ஸ்மார்ட் ரேஷன் கார்டு திருத்தம், சொத்து வரி பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட, 23,126 மனுக்களுக்கு, உடனடி தீர்வு காணப்பட்டது.
மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் கூறியதாவது: மகளிர் உரிமை தொகை கேட்டு வந்த, 1,22,239 மனுக்கள் மீது கள விசாரணை மேற்கொள்கிறோம். அதிக பட்சம், 45 நாட்களுக்குள் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மற்ற மனுக்களில் கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், மனுதாரரை அழைத்து நேரடியாக பெற்று சேவை செய்து தரப்படுகிறது. எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்கிற தகவல், முகாம் கடைசி நாளன்று அறிவிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
உரிமைத்தொகை மனு கள ஆய்வு
மகளிர் உரிமை தொகை கேட்டு வரும் விண்ணப்பங்கள், அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள மென்பொருளில் பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலரும், உதவியாளரும் நேரில் ஆய்வு செய்கின்றனர். சொந்த வீடா, வாடகை வீடா, எத்தனை சதுரடி வீடு, கார், டூவீலர் உள்ளிட்ட வாகன வசதிகள் இருக்கிறதா என்பதை கேட்டறிந்து குறிப்பிடுகின்றனர். இதன்பின், மாவட்ட சமூக பாதுகாப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் அறிவிப்புக்கு பின், உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.