/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழி கழிவு கொட்ட வந்த வாகனம் சிறை; ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
/
கோழி கழிவு கொட்ட வந்த வாகனம் சிறை; ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
கோழி கழிவு கொட்ட வந்த வாகனம் சிறை; ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
கோழி கழிவு கொட்ட வந்த வாகனம் சிறை; ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
ADDED : செப் 18, 2025 09:34 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கோழி கழிவு கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்து, போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
பொள்ளாச்சி - தாராபுரம் ரோடு பெரியாக்கவுண்டனுார் மயானம் அருகே, கோழி ஏற்றி செல்லும் வாகனத்தில், இறந்த கோழி, கோழி இறைச்சி கழிவுகளை கொட்ட வந்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாகனத்தை சிறை பிடித்து, கிழக்கு போலீசார், கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
தாராபுரம் ரோட்டோரம், கோழி இறைச்சி கழிவு உள்ளிட்ட பலவிதமான கழிவுகளை வீசிச் செல்கின்றனர். இந்த ரோட்டில் செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஓடை நீரில் கலக்கும் போது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது.
கழிவுகளை கொட்டிச் செல்வதால் அருகிலுள்ள தோட்டங்களில் வசிப்போர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலமுறை வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்பினாலும் தொடர்ந்து இதுபோன்று செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்குரிய நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
போலீசார், கிராம நிர்வாக அலுவலர், ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், ஊராட்சி நிர்வாகம் வாயிலாக, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், இது போன்று செயலில் தொடர்ந்து ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.