ADDED : செப் 07, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : எர்ணாகுளம் - டாட்டா நகர் (18190) இடையே தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் கோரிக்கையை தொடர்ந்து, இந்த ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு இனி, காலை 11.28க்கு வந்து, 11.30 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு மதியம் 12.13க்கு வந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும்.
ஈரோடு சந்திப்புக்கு மதியம் 1.05க்கு சென்று மதியம் 1.15 மணிக்கு புறப்படும். சேலம் சந்திப்புக்கு மதியம் 2.13க்கு சென்று மதியம் 2.15 மணிக்கு புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பயண நேர மாற்றம் நாளை (செப்., 8) முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.