/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூரில் 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
/
பேரூரில் 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
ADDED : செப் 07, 2025 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார் : ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மெட்ரோபாலிஸ் சார்பில், 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, பேரூரில் நேற்று முன்தினம் துவங்கியது. தினமும் மாலை 6.15 முதல் இரவு 8.55 மணி வரை நடன நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இரண்டாம் நாளான நேற்று, கோவை நிருத்யங்கனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, தொடர்ந்து, திருவனந்தபுரம் நீனா பிரசாத்தின் மோகினியாட்டம், பெங்களூரு மதுலிதா மோகபத்ராவின் ஒடிசி நடனம் நடந்தது.
பல்வேறு வகையான நடனங்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இன்று, பரதநாட்டியம் மற்றும் கதக் நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.